காது வலி வரக்காரணம் மற்றும்
அதை போக்கும் வழிமுறைகள் பற்றி நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்
மனிதர்களின் முக்கியமான புலன்களில் ஒன்று காது.
தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வில் ஆழ்ந்த பிறகு கடைசியாக தன்னுடைய
செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும் போது முதலில் செயல்படத்தொடங்குவது
காதுதான். சத்தங்களை கேட்பதற்கு
மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை.
நாம் நிலையாக
நிற்பதற்கும் கூட காதுதான் முக்கிய பங்காற்றுகிறது.
காது மண்டலம்,
வெளிக்காது , நடுக்காது , உட்காது அல்லது புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்று மூன்று பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது. சத்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை
அசைக்கிறது. இது நடுக்காதில் இருக்கும் மிகச்சிறிய எலும்புகளான மெல்லன்ஸ், இன்கஸ், ஸ்டெப்ஸ் என்கிற மூன்று எலும்புகளை அசைக்கும்.
அதில் ஸ்டெப்ஸ்
எலும்பினால் அதிர்வு தரப்பட்டு உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. இதனால் செவி நரம்பு
தூண்டப்பட்டு, அந்த ஓசை நம்
மூளைக்குசென்று நமக்கு சத்தத்தை உணர வைக்கிறது.
எப்போதும்
வெளிக்காது, உள்காது என
இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால், காது அடைப்பும் வலியும் ஏற்படும். விரல்களால்
மூக்கை அழுத்தி பிடித்து, முடிந்த அளவுக்கு
வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை
அடைந்து அடைப்பு வலி குறையும்.
மூக்கின் பின்
பகுதியில் இருந்து காதுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நோய்த் தொற்று
உண்டாவதால் காது வலி வரும்
சளியும்
மூக்கடைப்பும் மிகவும் அதிகமாகும் போது
காதுவலி வரும். தொடர்ந்து மூக்கு சீந்தினாலும் மிக வேகமாக அழுத்தத்துடன் மூக்கு சீந்தினாலும் காதில் வலி ஏற்படும்.
தேவையில்லாமல் அடிக்கடி அடிக்கடி காதைச் சுத்தம் செய்தால் கூட வலி
வரும். கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு காதை குடைவதால் வலி வரும்
காதில் யாராவது
அடித்தால் வலி வரும்
காதின் சவ்வு
கிழிபட்டால் வலி வரும்
அதிக சத்தம் காது
வலிக்கு மிக முக்கிய காரணம். வெடிச் சத்தம், பெரிய மணி ஓசை, பட்டாசு ஆகியன காதுக்கு மிக அருகில் கேட்பதால்
சவ்வு கிழிய வாய்ப்புண்டு.
அதிக
காய்ச்சலாலும் கூட சிலருக்கு காது வலிக்கலாம்.
நடுச் செவியில்
நீர்க்கோர்வை ஏற்பட்டிருந்தாலும் காது வலிக்கும்.
நீர்நிலைகளில்
குதித்து குளிப்பதாலும், கடல் நீரில்
குளிப்பதாலும் நோய் தொற்று ஏற்பட்டு நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று
கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும்
80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத்
தாங்கும். அதற்கு மேல் என்றால் சவ்வு கிழிபடும். அதனால் அதிக சப்தத்தைத்
தவிர்க்கவும்.
சுற்று
வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம்
காதில் பூச்சி
புகுந்துவிட்டால், சில துளி
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி செத்து வெளியே
வந்துவிடும்.
காதுக்குள்
இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால்
காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு
சுத்தம் செய்யக் கூடாது.
காதில் இயர் போன்
வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில்
வீடியோ கேம்ஸ், படம் பார்ப்பது
செல்போன் பேசினால் காது வலிக்கு அதிக காரணமாகும்.
நீண்ட நேரம்
செல்போன் பேசினால் காது வலிக்கும். அதனால் காது மாற்றி மாற்றிப் பேசப் பழகிக்
கொள்ள வேண்டும்.
கோதிலுள்ள
முடிகள் மிகவும் முக்கியமானவை, தூசியும்,
பூச்சியும் காதுக்குள்
நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி
எடுக்கக்கூடாது.
மூக்கை
சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும். எனவே
மூக்கை சிந்தும்போது அழுத்தம் கொடுக்காமல் சீந்த வேண்டும். அல்லது மூக்கை மெதுவாக
துடைக்க வேண்டும்
கடுகை அரைத்து
காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சினால் ஏற்படும் காதுவலி
குறையும்.
கரிசலாங்கண்ணி
சாறு நெல்லிக்காய் சாறு இரண்டையும் 100 மில்லி எடுத்து 200 மில்லி லிட்டர் பாலில் சேர்த்து 6 கிராம் அதிமதுரப் பொடியையும் அதில் போட்டு
தைலமாக்கி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது வலி குறையும்.
வெற்றிலையை சாறு
எடுத்து கருஞ்சீரகம் சிறிது சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வீக்கத்தின் மேல் போட
காது வீக்கம் குறையும்
ஒரு துண்டு
சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு
பால், சர்க்கரை சேர்த்து
இருவேளை சாப்பிட்டுவர காது குத்தல் குறையும்
பூண்டின் தோலை
உரித்து தலைப்பக்கம் கிள்ளிவிட்டு காதில் வைக்க காதுவலி காது இரைச்சல் குறையும்.
குப்பைமேனி
இலையுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து
காதைச் சுற்றிப் பூசினால் காதுவலி குறையும்
நல்லெண்ணைய்யில்
ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து ஆற வைத்து அந்த எண்ணெய்யை காதில் விட்டால் வலி
குறையும்