கிவிப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்


கிவிப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு
கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்

கிவிப்பழம், பசலிப்பழம் அல்லது சைனீஸ்கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் இந்தப்பழம் தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும். இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக சீனத்து நெல்லிக்கனி என்றும் அழைக்கிறார்கள்.

கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன பச்சை நிற கிவி, தங்க நிற கிவி, சிவப்பு நிற கிவி பழங்கள். முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது பச்சை நிறத்தில் உள்ள வகைதான். இத்தகைய வகைதான் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் அகப்பகுதியானது பச்சையாக இருக்கும் வெளித் தோலானது சற்று பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒவ்வொரு கனியும் சுமார் 50 முதல் 60 கிராம் அளவு இருக்கும்
கேக், ஜூஸ், ஜெல்லி தயாரிப்பதற்கு கிவிப்பழத்தை பயன்படுத்துகிறார்கள்
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர சோர்வு,மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்
மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.
பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது
100 கிராம் கிவிப்பழத்தில் 3.8 கிராம் நார்சத்து அடங்கி உள்ளது. அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
குடற்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் தீய ரசாயனங்களை அகற்றும் திறன் கிவிப்பழத்திற்கு உண்டு , மேலும் குடல் புற்றுநோய்க்கு எதிர்ப்பு தன்மையும் வழங்கக்கூடியது கிவிப்பழத்திலுள்ள நார்ப்பொருட்கள்
விட்டமின் ஈ யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது
கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம். பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது
ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன.உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.
கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும் கிவி பழத்தில் ஃபோலேட் என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.
இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால்   கிவிப்பழம் சாப்பிட்டு வந்தால்  அவற்றை குணப்படுத்தும்

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது
மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமனிகளில்  நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமனிகளில்  இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (ஹார்ட் அட்டாக்) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமனிகளில்  இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி கனிக்கு இயற்கையாக உள்ளது.
நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ரேடிக்கிள்கள்தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.முதுமைக் கால கண் நோய்களைத் தடுத்து  விட்டமின் சி சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது