கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை (curry leaf) என்று அழைக்கப்படும் இது பலமருத்துவ குணங்கள் மிக்கதும் ஆகும். அதன் தாவரவியல் பெயர் முறயா கொயிங்கீ (Murraya koenigii) என்றழைக்கப்படுகின்றது.
இந்த மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவையாகும். (இலை, ஈர்க்கு, பட்டை, வேர்) வாசனைப் பொருளாக மட்டுமன்றி, கறிவேப்பிலையை சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும். கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியாகும்.
வேம்பு இலையைப் போன்றே இருக்கும் கறிவேப்பிலை அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும். "கறிவேப்பிலை மரம்" அல்லது "கறுவேம்பு மரம்" என்றழைக்கப்படும், இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
மருத்துவ குணங்கள்
கறிவேப்பிலை
சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவு. நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்
சொல் விளக்கம்
கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. "கறி" எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.
"கறிவேப்பிலை" எனும் தமிழ் சொல்லை சிங்களத்தில் "கறபிஞ்சா" என்றும், வட இந்திய மொழிகளான இந்தி, வங்காளம் போன்ற மொழியினரின் "கறிபத்தா" என்றும் அழைக்கின்றனர். இம்மொழிகளில் பயன்படும் சொற்கள், தமிழ் மொழிச் சொல்லான கறிவேப்பிலை எனும் சொல்லின் மருவல் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.
இலங்கை மற்றும் பிறநாடுகளில்
கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களைப் போலவே சிங்களவர்களும் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை.
இலங்கை, இந்தியா தவிர்ந்த மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படுகின்றது. தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர்களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது.
பேச்சு வழக்கில்
"கறிவேப்பிலை" எனும் சொல் கறுவேப்பிலை, கறுவப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என பலவேறு விதமாக பேச்சு வழக்கில் பயன்படுகின்றது. கறிவேப்பிலை என்றே பேச்சு வழக்கிலும் பயன்படுத்துவோரும் உளர். குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழரின் பேச்சு வழக்கில் கேட்கலாம்; இருப்பினும் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என்றும் பேச்சு வழக்கில் பயன்படுவதும் உண்டு.
கறிவேப்பிலை சாப்பிடுவதால்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்ரறு உள் ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிதகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி போயே போச்சு.இது அனுபவ ரீதியாகக் கண்ட உண்டமை.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.
சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.
மன அழுத்தம் நீங்க
அதிக மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பார்கள். எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு அருமருந்தாக கறிவேப்பிலை திகழ்கிறது.
கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும்.
இளநரை மாற
இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.
கொழுப்புச் சத்து குறைய
இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.
சுவையின்மை நீங்க
சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இந்த சுவை அறியாதவர்களுக்கு எதைச் சாப்பிட்டாலும் மண்ணைத் தின்பது போலத்தான் இருக்கும். நிறைய குடும்பத்தில் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட இதுவும் ஒரு காரணமாகின்றது.
இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும்
தன்மை நாவிற்கு கிடைக்கும்.
வயிற்றுப் போக்கு குணமாக
கறிவேப்பிலை – 20 கிராம்
சீரகம் – 5 கிராம்
இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
• குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
• கண் பார்வை தெளிவடையும்
• இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
• மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும்.
• கை கால் நடுக்கத்தைப் போக்கும்.
• வீக்கம், கட்டிகள் போன்றவற்றைக் குணப் படுத்தும்.
• நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப் படுத்தும்.
இவ்வளவு மருத்துவப் பயன்களைக் கொண்ட கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயினறி நூறாண்டுகள் வாழலாம்.
